ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
"குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; தெலங்கானா போலீசார் சிறப்பான பணியை செய்துள்ளனர்!" - நிர்பயாவின் தாய்
குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் - பெண் மருத்துவரின் தந்தை
தெலுங்கானாவில் உள்ள பெண்கள் நான்கு பேரை சுட்டுக் கொன்றதற்கு பட்டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள் காவல்துறை போலீசாரை மிகவும் பாராட்டினார்கள்