சிகாகோ நகரில் முதல்வர்

 


        அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரம்மாண்டாக நடைபெற்ற தமிழ் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  "திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்"



"தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது"

"தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள்"

"வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள்"

"நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள்"

"சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்"

"நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும்"

"உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்"

"ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்"

"கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள். வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள்"

"திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்"

"உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள்"

- முதலமைச்சர் ஸ்டாலின்