சங்கத்திற்கு புதிய கட்டிடம்... பாராட்டிய மகளிர் அணி செயலாளர்

 

 

    🌷🌷 13.04.2024 அன்று நடந்த தமிழ் நாடு ஓய்வுதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட மாதாந்திர கூட்டம் திருவல்லிக்கேணி சங்க கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது.

அதில் சென்னை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக பங்கு கொண்டனர் 

மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கம் வளர்ச்சி பெற அரிய பெரிய கருத்தை பதிவு செய்தார்கள்.

சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி மோகனா செல்வராஜ் பேசியதாவது.

நண்பர்கள்  மற்றும் உறுப்பினர்கள் 

அனைவருக்கும் வணக்கம். 

என்று தன் பேச்சை தொடங்கினார்.

இன்று கா லை 

நிகழ்ச்சியில் தன்னை பேச அழைத்ததற்கு சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தன் 

 நன்றியை தெரிவித்து கொண்டார்.

 அவர்கள்  அனைவருக்கும்  சங்கத்தின் வலிமையே ஆதாரம்.  

சங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்களின் தலைமைத்துவத்தை  மனதார பாராட்டுவதாக கூறினார் .

 சங்கத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க பெரு முயற்சி செய்த  சங்கத்தின் மாநில தலைவர் அவர்களுக்கு பெரிய கைதட்டல் கொடுப்போம் என்று தன் பேச்சில் அனைவரையும் கவர்ந்தார்.

பொதுவான குறிக்கோள்கள் மற்றும் பொதுவான காரணம் மற்றும் பொதுவான அர்ப்பணிப்பு மற்றும் பகிரப்பட்ட வரலாறு மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட பின்னணி மற்றும் பகிரப்பட்ட நம்பிக்கை ஆகியவற்றால் இந்த ஓய்வு ஊதியர் சங்கம் இணைக்கப் பட்டதன்  விளைவு என்றும் ஒரு பணிவு உணர்வு நம்மை ஒன்றிணைக்கிறது. நம்மை ஒன்றிணைப்பவை நிறைய உள்ளன, நம்மைப் பிரிப்பவை குறைவாகவே உள்ளன.  பிணைப்பு வேறுபாடுகளை விட வலுவானது, 

ஆகையால் சங்க வளர்ச்சிக்கு பாடு பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.புதிய கட்டிட நிதி திரட்டும் பணியில் அனைவரும் ஒன்று பட்டு  சங்க வளர்ச்சிக்கு பாடுப டுவோம் என்றார்.

இலக்கு நோக்கி 

 சரியாகப் பெறும் வரை   நமது ஒற்றுமை மற்றும் வலிமை  காட்டுவோம்..நன்றி  என்று கூறி தன் உரையை முடித்தார் 

நாட்டு பண் இசைக்க கூட்டம் இனிதே முடிவுற்றது பிறகு விருந்தும் நடைபெற்றது.