இரு வரி செய்திகள்

 



    திருப்பூர்: இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு தடையின்மைச் சான்று வழங்க ₹10,000 லஞ்சம் கேட்டு, பிறகு ₹8000 லஞ்சம் பெற்ற திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன், அவரது உதவியாளர் சுரேஷ் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்

✳✳✳✳✳✳✳✳✳✳✳

எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் சி.ஏ.ஏ. சட்டம் பறிக்கவில்லை;

குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் , இந்திய குடிமக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை;

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்;

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் வெறுப்புணர்வு தூண்டுவதை நிறுத்த வேண்டும்”

- டெல்லியில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் பேட்டி

-✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுப்பை புதிய சட்டத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பிரதமர், பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம்

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்

57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவர் கைது

* சென்னையில் வைத்து கைது செய்து டெல்லி அழைத்துச் சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை - தமிழக அரசு அறிவிப்பு 

 

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில்  இருந்து விலக்கு  - தமிழக அரசு 

தமிழ்நாடு அரசு அரசாணையால் 1.20 லட்சம் பேர் பயனடைவார்கள் - தமிழக அரசு

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தகவல்.

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது எனவும் வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதிய விவகாரம்

குடியரசுத் தலைவருக்கு இத்தகைய கடிதம் எழுத பார் கவுன்சிலின் அனுமதியை ஆதிஷ் அகர்வாலா பெறவில்லை எனக்கூறி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் செயற்குழு சார்பில் செயலாளர் ரோஹித் பாண்டே அறிக்கை

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான வழக்கு;

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு;

இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ₹480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல். போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை கைது செய்து NCB அதிகாரிகள் விசாரணை

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

மாணவர்கள் உயிரிழப்பு - தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்

- மாநில போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳