"நம்ம சாலை" செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



     சென்னையில்: விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை    தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில் பதிவேற்றலாம். அந்தப்பழுது, 24 முதல் 72 மணி நேரத்துக்குள் அரசு சார்பில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 மேலும், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை எளிதில் இணைக்கின்ற வகையில், Closed User Group மொபைல் எண் சேவையையும் தொடங்கிவைத்தார்.

அதன்படி, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் வரும் சாலைகள் உட்பட சுமார் ரூ.623 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட பல்வேறு சாலைகளை திறந்து வைத்து.



இந்த புதிய தொழில்நுட்ப சேவைகளும் - சாலை வசதிகளும்,  தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு வலிமை சேர்க்கவுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார்.