முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுங்க உடலில் சர்க்கரை அளவு குறையும்

 


     *சர்க்கரை கட்டுப்பட முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுங்க..!*


வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர், ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்துக்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளை கட்டியிருக்கும். வெந்தயத்தை நேரடியாக உணவுப் பொருளில் சேர்த்தால், கசப்பாக இருக்கும். ஆனால், முளை கட்டி சாப்பிட்டால் கசப்பு சுவையே தெரியாது.

இவ்வாறு சாப்பிடுவதால் நல்ல பயன்கள் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து முளைகட்டிய  வெந்தயம் சாப்பிட்டுவர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும், இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிறு வலி, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும். நரம்புகளைப் பலப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு. வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்.  இல்லையெனில், தலைமுடியை அலசுவதற்குப் பயன்படுத்தலாம். வெந்தயத்தை அரைத்தும் தலைக்குத் தேய்த்துக் குளிக்க முடி கருமையாக இருக்கும், நன்றாகவும் வளரும்.


திருமதி மோகனா செல்வராஜ்


🌏..உண்மை செய்திகள்..🌏