மாணவ,மாணவியர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

 


    சிங்கார தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை பழையவண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் நடைபெற்றது.


சிங்கார தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நலசங்க தலைவர் பட்டவெட்டி உதயராஜ் வரவேற்புரையில்,கௌரவத்தலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் 200 பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்க தொழிலதிபர் மஹேந்திர வடேரா மற்றும் துனைத்தலைவர்கள் எச்.தமீம் அன்சாரி,என்.டி.சுந்தர்ராஜன்,செயலாளர் எச்.மொய்தீன்,பொருளாளர் ரமேஷ்படேல்,இணைத் தலைவர் எஸ்.எம்.முத்துவாப்பா,ஆலோசகர்கள் எஸ்.மணிகண்டன்,நிலேஷ் குமார்,வி.ராஜசேகர்,ஆர்.வாசிம் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கினர்.



    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக புரவலர்-சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி வி.பி.எம்.ஏ.சந்திரசேகரன்,விருதுநகர் தருமபண்டு அசோகன் ஆகியோர் வருகைதந்து பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு உயர்கல்விக்காக கல்வி ஊக்கதொகை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இதில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதன்,இஸ்மாயில்,குமார்,சரவணன்,கார்த்திக்,அருண்பிரசாத்,ஷாகுபர்சாதிக்,மணிவண்ணன்,பாபுலால்,தெய்வம்,அன்பரசு.முன்னாலால்,பாபுலால் படேல்,பீர்முகம்மது,நூருல்அமீன்,ஏழுமலை மற்றும் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் மாணவ,மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

        

🌏..உண்மை செய்திகள்..🌏