மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்கிடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனங்கற்கண்டு, சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உட்பட 45 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
இந்த நிலையில்,மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
🌷இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது.
மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது.
அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் பானு
🌏----உண்மை செய்திகள்----🌏