போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும்

 


        🌺போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும்"


தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; வாட்ஸ் அப் குழுக்கள் கண்காணிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும்"

தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நினைவில் கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் எவராக இருந்தாலும், எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் முதல்வர்  மு.க.ஸ்டாலின்.



    🍁கீழடி அருங்காட்சியகம் - திறந்து வைத்த முதல்வர்

🍁 கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைப்பு. மக்கள் அனைவரும் இங்கு வந்து நமது முன்னோர்களின் பயன்பாட்டில் உள்ள பொருட்களை கண்காட்சியில் காண வேண்டும் என்று கூறினார்


கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில் ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள்.

வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம்! முதல்வர்.

🚀🚀🚀🚀🚀🚀🚀

மக்கள் பிரச்னைகளில் தமிழக அரசு அதிக கவனம்: முதல்வர்

அரசைத் தேடி மக்கள் போன காலம் மாறி, மக்களைத் தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது”

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர்கள், விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த பொதுமக்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று கொண்டார்.

செய்தியாளர் கார்த்திக்

குறிப்பு:  லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏

    🌏-----உண்மை செய்திகள்-----🌏