🌷முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இளங்கோவன்

 


        🌷முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசம் பெற்றார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றார்.

 செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை -என்றும் இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினின் இரண்டாம் ஆண்டு சாதனைகளுக்கு  கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார் .கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குறுதிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார் என்றும் அதற்காகத்தான் இந்த மகத்தான வெற்றி கிடைத்து இருக்கிறது என்றும் தெரிவித்தார். 

செய்தியாளர் பாஸ்கர்


🌏-----உண்மை செய்திகள்-----🌏