இரு வரி செய்திகள்

 


      💐 திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

🙏தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி மரியாதை

 ♦♦♦♦♦♦

 👉காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரம்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் பணியிடை நீக்கம்

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை     

♦♦♦♦♦♦

 🙏ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!*

♦♦♦♦♦♦

👉வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

இதில் 14 பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

♦♦♦♦♦♦

👉ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர் நீதிமன்றம்

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


🌺தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

♦♦♦♦♦♦


🌹டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா சந்திப்பு

♦♦♦♦♦♦

😰ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

*அவரை காண்பதற்காக இன்று மாலை தேனி செல்கிறார் ஓபிஎஸ்*

♦♦♦♦♦♦

👉சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை - அமைச்சர் எ.வ.வேலு

♦♦♦♦♦♦

☝உத்தராகண்ட் மாநிலம் ஹல்தாவினி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஒரே இரவில் 50 ஆயிரம் மக்களை வெளியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது:தலைமை நீதிபதி கருத்து

4000 குடும்பங்களை ஒரே வாரத்தில் துணை ராணுவத்தை கொண்டு வெளியேற்ற மாநில அரசு

♦♦♦♦♦♦

✌ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்குகள்

தமிழக அரசு, காவல்துறை ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

♦♦♦♦♦♦

செய்தியாளர் பானு