ஒரு வரி செய்திகள்

 


   👉 இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

💋💋💋💋💋💋

    👉தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3மாதம் பணி நீட்டிப்பு

💋💋💋💋💋💋🙏காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கரையில் ஆய்வு செய்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு மக்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

💋💋💋💋💋💋

👉அரசு பேருந்து மீது லாரி மோதல் - இருவர் பலி

புதுக்கோட்டை: திருவரங்குளம் அருகே 

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு - 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழப்பு

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு லாரியில் ஊர் திரும்பும் போது விபத்து

💋💋💋💋💋💋

👉பிரதமர் மோடி எழுதிய ‘Exam Warriors' புத்தகத்தின் தமிழாக்கத்தை, ஆளுநர் ரவி வெளியிட்டார்

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின் முதல் பிரதியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார்

💋💋💋💋💋💋

👉ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்புஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின்

 பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு

💋💋💋💋💋💋

👉ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை

சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை; 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு

💋💋💋💋💋💋

👉பாலமேடு ஜல்லிகட்டில் காளை முட்டி இறந்த வீரர் அரவிந்த ராஜன் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த ₹3 லட்சத்திற்கான காசோலை மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ₹2 லட்சம் என ₹5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

💋💋💋💋💋💋    👉விழுப்புரம் திமுக அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.

💋💋💋💋💋💋

🙏முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் எம். ஜி ஆர் 106 ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக கட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டது

💋💋💋💋💋💋

👉உதயநிதி - மு.க.அழகிரி சந்திப்பால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு*

💋💋💋💋💋💋

👉இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது;

இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும்"

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

💋💋💋💋💋💋

👉நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி

மாமல்லபுரம் : தனியார் நட்சித்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து 8 வயது சிறுமி பலி

பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது நிகழ்ந்த சோகம்

💋💋💋💋💋💋

👉சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு சரத்குமார் நேரில் ஆறுதல்


🙏எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்

💋💋💋💋💋💋

👉புதுக்கோட்டை மாவட்டம் இறையூர்  வேங்கை வயல்  சம்பவம்: தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்;

அதனால் தான் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம்  ஒப்படைத்துள்ளது"

- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

💋💋💋💋💋💋

'👉ஒரே நாடு-ஒரே தேர்தல் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைக்கிறார் மோடி ஜி'- செல்லூர் ராஜூ

💋💋💋💋💋💋


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள  கேஸ் சிலிண்டர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.

💋💋💋💋💋💋

செய்தியாளர் கார்த்திக்