ஒரு வரிச் செய்திகள்

 


    ♥புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் இல்லை - டிஜிபி சைலேந்திர பாபு

💊💊💊💊💊💊

    😪கோவை: ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்பு!

பயிற்சிக்காக வந்த அவர், 18ம் தேதி அங்கிருந்து ஓடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது; இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை தீவிரம்.

💊💊💊💊💊💊

👉ஊதிய முரண்பாட்டை களையக்கோரி 6வதாக நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் - உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 175 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி .

💊💊💊💊💊💊

👮ஹரியானாவில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் அளித்த புகாரில், பாலியல் வழக்குப்பதிவு

சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

💊💊💊💊💊💊

👦சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு; 


அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்கு


மாநகர் முழுவதும் ஒட்டுமொத்தமாக 276 வாகனங்கள் பறிமுதல்

💊💊💊💊💊💊

    👉பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு;

அரிசி, பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்

-அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை

💊💊💊💊💊💊

👉விழுப்புரம்: கஞ்சனூர் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் கெடார் எஸ்.ஐ சுதா இருவரையும் சஸ்பெண்ட் செய்து சரக டி.ஐ.ஜி உத்தரவு


சூரப்பட்டு இளைஞர் தற்கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதால் நடவடிக்கை

💊💊💊💊💊💊

👮தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இது வரை 125 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 7 லட்சத்து71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 77.12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 23 பேர் கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

💊💊💊💊💊💊

🙏2023ஆம் ஆண்டிற்கான அரசு நாட்காட்டியினை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.

💊💊💊💊💊💊

👉வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரிக்கிறது; நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திப்பதாகவும் அதிருப்தி

💊💊💊💊💊💊

👉மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் கணக்கெடுப்பு பணிகள் 85% நிறைவு

2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்

 மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

💊💊💊💊💊💊

🙏108வது இந்திய அறிவியல் மாநாட்டை வரும் ஜன.3ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

* நாக்பூரில் ஜன.3ம் தேதி தொடங்கும் மாநாடு ஜன.7ம் தேதி வரை நடைபெறவுள்ளது

💊💊💊💊💊💊

😢மெக்காவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை கல்ஃப் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பக்ரைனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ராஜா முகமது (66) என்பவர் திடீர் நெஞ்சு வலியால் விமானத்திலேயே உயிரிழந்தார்!*

💊💊💊💊💊💊

செய்தியாளர் பானு