ஆளுநர் உரையும் நிகழ்வும்

 


🍁சட்டமன்றத்தில் ஆளுநர் பேச்சு


(09-01-23)அன்று சட்டப்பேரவையில் தன்னுடைய உரையுடன் ஆளுநர் தொடங்கும் போது, ‘தமிழ்நாடு வாழ்க"வணக்கம் என்று ஆரம்பித்தார்

  🌹தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கியுள்ள காலை உணவு திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது” - முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

🌹மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது 

🌹பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது

🌹மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது 

🌹கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது 

🌹நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும்,கிராம புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.

🌹நீட் தடைவிதிக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது-ஆளுநர்

✋சட்டப்பேரவையில் முழு உரையையும் தமிழில் ஆளுநர் பேசி வரும்போது 

ஆளுநரை பேச விடாமல், திமுக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்  

👉ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

👉தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாதுசட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்"

"எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே மாறாக ஆளுநர் நடந்து கொண்டார்"

அரசின் உரையை முழுமையாக படிக்காதது சட்டமன்ற மரபை மீறிய ஒன்று - முதல்வர் ஸ்டாலின்


👉சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சட்டமன்ற நடவடிக்கைகள் முடிவதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறினார்

👉பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை; 

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது”

- சபாநாயகர் அப்பாவு பேட்டி!


👉.ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல"

ஆளுநர் உரையை கேட்க வந்தோமே தவிர, முதல்வர் உரையை அல்ல - ஈபிஎஸ்

👉சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை  தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை" - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்

👉ஆளுநர் சட்டப்பேரவையின் மரபை மீறி, அரசால் தயாரிக்கப்பட்ட உரையை மாற்றிப் படித்தது கடும் கண்டனத்துக்கு உரியது. இத்தகைய அடாவடிச் செயல்களை ஆளுநர் தமிழ்நாட்டில் நிகழ்த்தி வருவதை அனுமதிக்கவே முடியாது

-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை


👉ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்.  இது அவரது தனிப்பட்ட நடவடிக்கை என்பதைவிட 'ஆர்எஸ்எஸின் திட்டமிட்ட நடவடிக்கையே' என்பது தெளிவாகிறது

-விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை


👉மாநில அரசு தயாரித்த அறிக்கையை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை"

- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

👉ஆளுநரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு - பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன்


👉கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது

திமுக பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது  நியாயமா?

தங்களால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு

வேடிக்கை பார்க்கிறது திமுக

மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


செய்தியாளர் பாலாஜி