🇮🇳🇮🇳இந்தியாவின் 74 - வது குடியரசு தினம்

 


🇮🇳🇮🇳இந்தியாவின் 74 - வது குடியரசு தினம் 


இந்தியாவின் 74வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

இந்தியாவில் அரசியல்சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது

🇮🇳🇮🇳முதல்முறையாக டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு    அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும். இதன்மூலம் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த நாளில், நீதிபதி பிஎன் ராவின் பங்கையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

ஆரம்ப வரைவைத் தயாரித்து, அரசியலமைப்பை உருவாக்குவதில் உதவிய  நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நன்றி என கூறினார்.🌷பத்ம விருதுகள் அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிப்பு

26 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

மறைந்த மருத்துவர் திலீப் மஹலனாபிஸுக்கு பத்ம விபூஷன் விருது

🇮🇳🇮🇳தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள பின்னனி பாடகி வாணி ஜெயராம் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள ஐந்து பேருக்கும் பாராட்டுகள் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்*

நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்🌹    🇮🇳🇮🇳டெல்லியில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது.

 தமிழ்நாடு, கேரளா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன


செய்தியாளர் கார்த்திக்