ஒரு வரிச் செய்திகள்

 


        🌸சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன், அவரது தம்பி மேயர்ஜெகன் உட்பட 5 பேரும் விடுதலை

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை பெற்றுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது: கீதா ஜீவன்

♦♦♦♦♦♦

    🌸தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு;

♦♦♦♦♦♦

🌸தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

♦♦♦♦♦♦

🌸சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகள் வாடகையை உயர்த்தக் கோரி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து துறைமுக ஒப்பந்ததாரர் ட்ரெய்லர் நல கூட்டமைப்பினர் அறிவிப்பு

♦♦♦♦♦♦

🌸திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி  பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு அளித்தார்.

♦♦♦♦♦♦

🌸அதிமுக எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சி; நானும் இதைப் பின்பற்றித்தான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன்; எனவே நாங்கள்தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் - சசிகலா அறிக்கை

♦♦♦♦♦♦

🌸ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட விவகாரம்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

♦♦♦♦♦♦

🌸கடந்த ஆறு மாதத்தில் வந்தே பாரத் ரயில் மீது விலங்குகள் மோதும் சம்பவம் 68 முறை நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது

♦♦♦♦♦♦

🌸கஜபூஜை என அனுமதிபெற்று அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல விழாவிற்கு பயன்படுத்தப்பட்ட யானைகள்? - வனத்துறையின் ஆர்.டி.ஐ பதிலால் அதிர்ச்சி

♦♦♦♦♦♦

🌸கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்த நிலையில், 5 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்;

விசாரணை மனுவை மீண்டும் நாளை விசாரிப்பதாக நீதிபதி இளவழகன் தெரிவித்ததையடுத்து 5 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

♦♦♦♦♦♦

🌸ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு - விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல்

♦♦♦♦♦♦

🌸விருத்தாசலம் அடுத்த  வண்ணான்குடிகாடு  கிராமத்தில்   மினி வேன் மோதி  4 வயது பெண் குழந்தை தலை நசுங்கி உயிரிழப்பு.

♦♦♦♦♦♦

🌸சென்னை பாடியில் மூன்று கொலை வழக்குகளை தொடர்புடைய பிரபல ரவுடி சுரேஷ் என்கின்ற கருக்கா சுரேஷ் முன் விரோதம் காரணமாக வெட்டி படுகொலை

♦♦♦♦♦♦

🌸அரியலூர்: 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

♦♦♦♦♦♦

செய்தியாளர் மணிவண்ணன்