இருவரிச் செய்திகள்

 


      🌷🌷 உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்;


மேலும் பல உலக சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்”

- தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

🌙🌙🌙🌙🌙🌙🌙

     👉சமூக நீதியோடு பெண்களுக்கென நடைபெறும் ஆட்சியாக திமுக உள்ளது;


பெண்களுக்கென இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்

- அமைச்சர் பொன்முடி

🌙🌙🌙🌙🌙🌙🌙

     👉மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ₨15 ஆக உயர்த்த முடிவு


ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் அறிவிப்பு

🌙🌙🌙🌙🌙🌙🌙

     🙏கொட்டும் மழையில் வாக்களிப்பு!


நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் தேர்தலில் தீடிரென பெய்த கனமழையிலும் வரிசையில் நின்று வாக்களித்து வரும் வாக்காளர்கள்


நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு என்.ஆர். தனபாலன் போட்டி

🌙🌙🌙🌙🌙🌙🌙

    👉முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பிரச்னையை பற்றி பேசி தீர்க்க வேண்டும்;


மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்"

-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

🌙🌙🌙🌙🌙🌙🌙

     👉ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் - விசாரணைக்கு உத்தரவு

திருவள்ளூரில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவம்

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தென்னக ரயில்வே

விசாரணைக்கு பிறகு இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் - தென்னக ரயில்வே

🌙🌙🌙🌙🌙🌙🌙

👉சென்னையில் குடிநீரின் தரம் சோதனை! 


குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு 1916 & 04445674567 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தகவல்.

🌙🌙🌙🌙🌙🌙🌙

    👉திமுக ஆட்சி முடியும்போது 30% வரை மின்கட்டணம் உயர்ந்திருக்கும்;


அதிமுகவில் பி டீம் உருவாகி உள்ளனர். எத்தனை டீம் வந்தாலும் எடப்பாடி பழனிசாமியை ஒன்றும் செய்யமுடியாது”

-முன்னாள் அமைச்சர் தங்கமணி

🌙🌙🌙🌙🌙🌙🌙

    👉சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு! 


மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவு.

🌙🌙🌙🌙🌙🌙🌙

     👉சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழப்பு

🌙🌙🌙🌙🌙🌙🌙


செய்தியாளர் பாஸ்கர்