பத்திரிக்கை துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் முதல்வர்

 


     🌷🌷செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை  முதலமைச்சர் வழங்கினார்.

🚀🚀🚀🚀🚀🚀🚀

    👉ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27ம் தேதி முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக  2,631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக ₹19,97,900 பெறப்பட்டுள்ளது!

🚀🚀🚀🚀🚀🚀🚀

    👉நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு;


திமுகவினர் 11 பேர் அடங்கிய வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு, 10 மகளிர் குழுக்கள் அமைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

🚀🚀🚀🚀🚀🚀🚀

    🙏நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி RSS பேரணிக்கு அனுமதி


அந்த அந்த மாவட்டங்களில் உள்ள சட்டம், ஒழுங்கு, சூழலுக்கு ஏற்றவாறு அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவு

🚀🚀🚀🚀🚀🚀🚀

     👉மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன். தொந்தரவு செய்வதற்காக அல்ல;


எந்த மதத்திற்கும் பாஜக எதிரானது அல்ல”


- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

🚀🚀🚀🚀🚀🚀🚀

    👮சென்னை அண்ணா சாலையில் நூதன முறையில் ATMல் இருந்து ₹28,400 கொள்ளை


வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துச் சென்ற பிறகு ATM இயத்திரத்தில் ஒட்டும் தன்மை கொண்ட ஜெல் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை திருடும் கும்பல்; சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை

🚀🚀🚀🚀🚀🚀🚀

    👮மதுரை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் 329 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாநகரில் 257 வழக்குகளும், புறநகர் பகுதிகளில் 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

🚀🚀🚀🚀🚀🚀🚀

    👮சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பீகாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் போத்ரா (49), தனது மனைவியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு நடந்து சென்றபோது ₹15,000 பணம் பறிப்பு


3 திருநங்கைகள் வந்து பணப்பையை பறித்துச் சென்று விட்டதாக புகார் - போலீசார் விசாரணை

🚀🚀🚀🚀🚀🚀🚀