குறளோடு உறவாடு (18/19)

                   🍁வான் சிறப்பு

           குறளோடு உறவாடு (18)

******************************

                      🙏குறள்

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கு மேல் வானோர்க்கு மீண்டு.."


                          🌷உரை

மழை பெய்யாமல் போனால், இவ்வுலகில் திருவிழாக்களுடன் நடைபெற வேண்டிய பூஜை வானவர்களுக்கும் நடைபெறாது.


குறளோடு உறவாடு (19)

******************************

                         🙏குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.."


                         🌷உரை

வான் மழை பெய்யாமல் போனால், அகன்ற இந்த உலகத்தில் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறாது.


                              🙏திருவள்ளுவர் 


- க.இராமலிங்க ஜோதி.  குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏