10% இடஒதுக்கீடு தீர்ப்பு உச்சநீதிமன்றம்

 


    🙏உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழக்கும்  10%இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு


5 நீதிபதிகளில் 3 பேர் 10% இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு


பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது

🌴🌴🌴🌴🌴🌴🌴

    👉10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு;

சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌴🌴🌴🌴🌴🌴🌴

    🙏உச்சநீதிமன்றத்தின் 10% இட ஒதுக்கீடு தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி மனதார வரவேற்கிறது


 - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

🌴🌴🌴🌴🌴🌴🌴

     🙏பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது”


-காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

🌴🌴🌴🌴🌴🌴🌴

     👉பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிசி,எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி

- உதயநிதி ஸ்டாலின், திமுக எம்எல்ஏ

🌴🌴🌴🌴🌴🌴🌴

     👉 பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக் காரணம். எனவே, நீதிபதிகளின் கருத்து ஏற்புடையதல்ல;

-சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

🌴🌴🌴🌴🌴🌴🌴

    👉முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி; வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

🌴🌴🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் பாலாஜி