முக்கியச் செய்திகள்...!!
🕉️🕉️🕉️🕉️
திருப்பதியில் நவம்பர் 1ஆம் தேதி முதல், நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
🕉️🕉️🕉️🕉️🕉️
பிரம்மாண்ட சிவன் சிலை:
ராஜஸ்தானின் நத்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள சுமார் 369 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.
🌸
டாக்டர் பட்டம் செல்லாது:
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் படித்து பெறும் டாக்டர் பட்டம் செல்லாது என்று யுஜிசி, ஏஐசிடிஇ தெரிவித்துள்ளன.
🌸
மாவட்டச் செய்திகள்
புதிய சாதனை:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிகபட்சமாக ஒரே கப்பலில் இருந்து 120 ராட்சத காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
🌨️🌨️🌨️🌨️🌨️🌨️
இன்று தொடங்குகிறது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது. 20 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌸🌸🌸
அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்:
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
🌸
ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு:
முதல்வன் பட பாணியைப் போல், காலாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற விழுப்புரம் மாணவி லோகிதாவுக்கு அரசு பள்ளியில் ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கி ஆசிரியர்கள் அங்கீகரித்தனர்.
🌸
விளையாட்டுச் செய்திகள்
சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டி:
10வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டியின் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
🌸
இந்தியா தேசிய ரேங்கிங் பெண்கள் பளுதூக்குதல் போட்டி:
கேலோ இந்தியா தேசிய ரேங்கிங் பெண்கள் பளுதூக்குதல் போட்டியில் 40 கிலோ எடைப்பிரிவில் மராட்டிய வீராங்கனை அகாங்ஷா யாவஹரே 'ஸ்னாச்" முறையில் 60 கிலோ 'கிளீன் அண்ட் ஜெர்க்" முறையில் 71 கிலோ என்று ஒட்டுமொத்தத்தில் 131 கிலோ எடை தூக்கி மூன்று பிரிவிலும் புதிய தேசிய சாதனைகளை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
🌸
புரோ கபடி லீக்:
9வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் 38-27 என்ற கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஹரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. அடுத்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 34-29 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
திருமதி மோகனா செல்வராஜ்