இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

 


     👉இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

இந்தியை திணிப்பதற்கு சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை.

இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும்.இந்தி திணிப்பு நாட்டை பிளவு படுத்தும்.

அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது-முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.

🌴🌴🌴🌴🌴🌴

    👉குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியா - RPF உறுதிமொழி ஏற்பு


மாம்பலம் ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், ரயில்வே பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என உறுதிமொழி ஏற்றனர்

  🌴🌴🌴🌴🌴🌴  

    👮சென்னை ராயப்பேட்டையில் துரித உணவகத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை; ரகசிய தகவலை அடுத்து கஞ்சா வாங்குவோர் போல சென்று போலீசார் கைது நடவடிக்கை

பைக்கில் சென்று விற்பனை செய்தவர்களும் கைது; 10 கிலோ கஞ்சா,₹40 ஆயிரம் பணம், பைக் பறிமுதல்

🌴🌴🌴🌴🌴🌴

    👉புதுச்சேரியில் அரிசி - சர்க்கரைக்கு பதில் பணம் 


புதுச்சேரியில் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴🌴

    👉கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அதிமுக 51-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை சிறப்பாக கொண்டாடுவது பற்றி விவாதித்தோம் - ஜெயக்குமார்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி  விவாதிக்கவில்லை - ஜெயக்குமார்

🌴🌴🌴🌴🌴🌴

    👉ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’.. கம்யூனிஸ்ட் மாநாட்டில் தைவான் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை.

🌴🌴🌴🌴🌴🌴

    😚தாராபுரம் அருகே செயற்கை விவசாய குட்டை நீரில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மகனை காப்பாற்ற சென்ற போது தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்; 2 உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை

🌴🌴🌴🌴🌴🌴

    👉புதுக்கோட்டை: தக்காளி மொத்த விற்பனை வியாபாரி ராஜலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த வழக்கில், இருவர் கைது

47 சவரன் தங்க நகைகள், ₹35,000 பணம் மீட்பு; திருட்டு நடந்த 5 நாட்களில் குற்றவாளிகளைப் பிடித்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு

🌴🌴🌴🌴🌴🌴

 👉துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.43.5 லட்சம் மதிப்புடைய 988 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

தங்க பசையைக் கடத்தி வந்த இலங்கை பயணி தப்பியோட்டம்.


செய்தியாளர் பாஸ்கர்