💐2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🌹

 


        💐2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🌹


🌷திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடியை நியமித்தார் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.


🌺நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும்    திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

"ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.செல்வாக்கு உயர்ந்திருப்பதுதான் பயத்தை உருவாக்கியிருக்கிறது;

நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே சிந்தனையாக உள்ளது"

மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.. 

மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்..

- அரங்கத்தை அதிரவைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உரை


என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்று தவிக்கிறேன்;


துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது"

சிலர் பொது இடங்களில் நடந்த கொண்ட விதம் பழிகளுக்கும், ஏளனத்திற்கும் உள்ளாகியது-தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேச வேண்டும் என்ற முதலமைச்சரின் உருக்கமான வேண்டுகோள்

நான் ஒரு புறம் கட்சி தலைமை பதவியையும் மற்றொருபுறம் மக்கள் நலனுக்காக ஆட்சியையும் என மத்தளம் போல் செயல்படுகிறேன் என்று தனது உரையில் கூறினார்.💐நேருவிற்கு நிகர் நேரு 

💐திண்டுக்கல் வீரர் ; கழகத்தின் தீரர் ஐ.பி.

கலைஞரால் அறிவுமுடி என போற்றப்பட்ட பொன்முடி

💐கலைஞரால் தகத்தாய சூரியன் எனப்பட்ட ஆ.ராசா

💐அடித்தள மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ்


🌹டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி 

- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்


💐திமுக தலைவர் பதவியேற்ற முதல்வருக்கு  தலைவர்கள் வாழ்த்து🌹

🌴🌴🌴🌴🌴

🙏பெரியார்,அண்ணா,கருணாநிதி மேடையில் பேசுவதை பார்த்துள்ளோம். இந்த மூவரையும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் ஒன்றாக பார்க்கலாம்;

50 ஆண்டுகாலம் கழகத்திற்கு உழைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்


2024..தனித்து நின்றாலும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும்

அந்தளவிற்கு முதலமைச்சர் உழைத்துக்கொண்டு இருக்கிறார்


- ஐ. பெரியசாமி

- துணை பொதுச்செயலாளர்  ஐ.பெரியசாமி

🌴🌴🌴🌴🌴

🙏அண்ணா ஸ்டாலின் 

அப்பா இல்லாத இடத்திலேயே உங்களை வைத்துப் பார்க்கிறேன்

அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்

- கனிமொழி

🌴🌴🌴🌴🌴

💐கனிமொழிக்கு எனது வாழ்த்துகள். ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான்,அதற்கு எனது பாராட்டுகள்;

ஆனால் வாரிசு அரசியல்தான் அடையாளமாகிவிடுமோ என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது”

- துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

🌴🌴🌴🌴🌴

💐திமுக தலைவராக 2வது முறையாக தேர்வாகியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!


செய்தியாளர் பாலாஜி