முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா

 


    முன்னாள் பாரத பிரதமர்  ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர்.தியாகராயா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ராஜீவ் நட்பகம்" சார்பில் காங்கிரசார் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் க.இராமலிங்க ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.பொன்னுரங்கம்,ஆர்.கே. நகர் 3வது சர்க்கிள் தலைவர் 

டி.கே.மூர்த்தி,வடசென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.எஸ். ஷாஜகான்,வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் கே.வி.எஸ்.தயாளன்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே.பாபு சுந்தரம், அருணா அன்கோ உரிமையாளர் அருணாசலம்,மனித உரிமை துறை மாநில செயலாளர் பி.வேலா,வட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, சுரேஷ்,எஸ்.அன்பழகன்,ஈ.எஸ்.பார்த்தசாரதி,ஜெ.ஜெயப்பிரகாஷ்,துராபுதீன்,பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இதனையடுத்து சென்னை கொருக்குப்பேட்டை கே.என்.எஸ்.டிப்போ அருகே உள்ள ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு சர்க்கிள் தலைவர் டி.கே.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மறியாதை செய்யபட்டது.