சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.
திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன
போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியும்.
போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - மு.க ஸ்டாலின்.
போதை பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு.
போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
பெற்றோர்கள்,ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்; தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும்.
மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை.
போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது.
போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை.
போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் இடங்களை அதிகமாக கண்காணிக்க வேண்டும்.
சட்டங்களை திருத்தி கடுமையாக்க அரசு முடிவு எடுத்துள்ளது -
சர்வாதிகாரியாக செயல்பட்டு தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிப்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு காவலர்களும் தனது எல்லைக்குள் போதைப்பொருள் இல்லை என உறுதிமொழி ஏற்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செய்தியாளர் கார்த்திக்