டெல்லி, செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

 


💐தேசியக் கொடியேற்றினார் பிரதமர்💐


டெல்லி, செங்கோட்டையில் 9வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி


விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது


        சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை.


மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம்.


நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம்; இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமை. 

நாடு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது

மங்கள் பாண்டே, பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது

ஆங்கிலேயர்கள் வெளியேறினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுவிடும் என்று கூறினார்கள் - பிரதமர் மோடி

பல்வேறு தடைகள் இருந்தும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி  நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது;

"மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், சவர்க்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்கும் நாள் இது!



வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்" பிரதமர் மோடி பெருமிதம்

200 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது  - பிரதமர் மோடி

 வேகமான வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் காலம் - பிரதமர் மோடி

 உலகம் தற்போது தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை இந்தியாவிலிருந்து தீர்வு காண விரும்புகிறது.


அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை  அகற்றப்பட வேண்டும்;

அனைவரும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்,  அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்



ஊழலுக்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்: பிரதமர் மோடி


எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்று சேர்வது என்பதுதான்; 

அது தான் மகாத்மா காந்தி உடைய கனவாக இருந்தது - பிரதமர்  மோடி


ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை உறுதி செய்துள்ளோம்

75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை நாம் கண்டிருக்கிறோம் 

8 ஆண்டுகளுக்கு முன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்தது

இந்தியா வளர்ச்சி அடைய 5 முக்கிய வழிமுறைகள் வேண்டும் என்று தனது உரையில் கூறினார் பிரதமர்.


செய்தியாளர் தங்கதுரை