ஒரு வரிச் செய்தி துளிகள்

 


        🙏தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தேர்வு


தமிழ்நாடு அரசு அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴

 


   👉*நத்தம் அருகே டிவி மெக்கானிக் வெட்டிக்கொலை*


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் டிவி மெக்கானிக் ராஜா(37) என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை.

🌴🌴🌴🌴🌴

    💐குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

🌴🌴🌴🌴🌴

    👉சீனாவில் உளவுத்துறை கப்பல் இலங்கையில் அந்நாட்டு அரசின் அனுமதியுடன் நிலைகொள்ளவி இருப்பது இந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் சீமான் அறிக்கை

🌴🌴🌴🌴🌴

    👉திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

🌴🌴🌴🌴🌴

    👉வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள்  உயர் நீதிமன்றத்தில் மனு


ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுத்தல், குற்ற நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடுதல் ஆகியவையே சட்ட விரோதமாக கூடுவதாக கருத முடியும் - நீதிபதி

வழக்கை ரத்து செய்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு

🌴🌴🌴🌴🌴

    👉மன்னார்குடி அருகே மாளிகைமேடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வீட்டில் கழிவறை கட்டுவதற்கு மண் தோண்டும் போது அம்மன் சிலை மற்றும்  பெருமாள் உள்ளிட்ட 5  மண் சிலைகள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

🌴🌴🌴🌴🌴

    👉மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு


ஆக.8ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தேசிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் - தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴

    💐விளையாட்டு வீரர்களுக்கான பென்ஷன் 3000 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் உயர்வு

🌴🌴🌴🌴🌴

    👉அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

🌴🌴🌴🌴🌴

    👉நெல்லை: மணிமுத்தாறில் சிறப்பு காவல் படை 12ம் அணி காவலர் தமிழ்செல்வன் தீக்குளித்து தற்கொலை முயற்சி;


நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி

🌴🌴🌴🌴🌴

    👉நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்


படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

🌴🌴🌴🌴🌴

    👉நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம்;


நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

🌴🌴🌴🌴🌴

  


  👉பிங்க் பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்

🌴🌴🌴🌴🌴

    👉அரசு மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல்


சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை

🌴🌴🌴🌴🌴

👉ஆகஸ்ட் 06 - ஹிரோஷிமா நினைவு தினம்


1945 ஆகஸ்ட் 6 ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. இதில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

🌴🌴🌴🌴🌴

    👉மேட்டுப்பாளையம்:காரமடை, மருதூர் ஊராட்சியில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு என முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கராஜனுக்கு ரூ.30லட்சம் அபராதம்;


30 நாட்களில் பணத்தை செலுத்தாவிட்டால் வட்டியுடன் கட்ட வேண்டும் என ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் எச்சரிக்கை


🌴🌴🌴🌴🌴

செய்தியாளர் பாஸ்கர்