"I Don't Care" என்று கூறி முன்னேற வேண்டும் முதலமைச்சர்

 


     🌹திருவண்ணாமலையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.


திருவண்ணாமலையை 1989ல் தனி மாவட்டமாக அறிவித்தது திமுக அரசு 


அறிவுக்கு ஒவ்வாத மூட கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும்தான் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்கள், உண்மையான 

ஆன்மீகவாதியாக நிச்சயமாக இருக்க முடியாது


2004ல் அண்ணாமலையார் கோயிலை பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மீட்டுக்கொடுத்தது திமுக.. இன்று மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.


அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது திமுக அரசு - திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லலாம், அதனை நாங்கள் செயல்படுத்துவோம்; பொய்யும், புரட்டும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி I Don't Care, நான் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் I Don't Care என்று கூறி நகர வேண்டும்- முதலமைச்சர்.


செய்தியாளர் பானு