இருவரிச் செய்திகள்

 


     💐உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும்  இணையதளமான letterboxd தளம் வெளியிட்ட பட்டியலின்படி


2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களில் 

தமிழில் வெளிவந்த "கடைசி விவசாயி " திரைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது

🍁🍁🍁🍁🍁

    👉திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்


சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

🍁🍁🍁🍁🍁

    👉தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.


"வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" - நீதிபதி

🍁🍁🍁🍁🍁

    🙏சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு


மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் ‘கலைஞர்’ பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🍁🍁🍁🍁🍁

    👉தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம்;


பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்”-பாளையங்கோட்டையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

🍁🍁🍁🍁🍁

👉வரும் தேர்தலில் பாஜக 160 தொகுதியில் நின்றால் 140 தொகுதிகளில் வெற்றி பெறும்;


இதைக்கேட்டு அதிமுக கோபப்படக் கூடாது. தனது பலம் என்ன? பலவீனம் என்ன? என்று அதிமுக தெரிந்துகொள்ள வேண்டும்

- ராதாரவி, பாஜக.

🍁🍁🍁🍁🍁

    👉கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியா முழுவதும் 300 கோடி வசூல் என தகவல்

🍁🍁🍁🍁🍁

    👉சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்


₨1 லட்சம் கட்டினால் மாதம் ₨30 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு


*ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போராட்டம்

🍁🍁🍁🍁🍁

    👉திண்டுக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்  கடைபிடிக்காதவர்கள் மீதும் முக கவசம் அணியாதவர்கள் மீதும் பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன்.

🍁🍁🍁🍁🍁

    👦👉மதுரை : நாகமலை புதுக்கோட்டையில் மது அருந்தியவரை தட்டி கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கு


*கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    👉இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

🍁🍁🍁🍁🍁

    👉சென்னை: என் மாமனார் பாலியல் தொல்லை கொடுக்கிறார் - துணை நடிகை ரஞ்சனா பரபரப்பு புகார்

🍁🍁🍁🍁🍁


செய்தியாளர் கார்த்திக்