ஒரு வரிச் செய்திகள்

 


    👉கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர்


அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது


   👉 யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு


 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு


    👈👉சென்னை அருகே பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு சிறப்பு அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து எவ்வித மனுவும் கிடைக்கவில்லை


- பசுமை வழி விமான நிலையங்கள் தொடர்பாக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர்  வி.கே சிங் பதில்


    👉மதுரை: 70% மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவது ஆய்வில் கண்டுபிடிப்பு


    👉புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இரு தரப்பினர் மோதல்;

தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்திய போலீஸார்


    👉திமுகவின் கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.நந்தகோபால் அதிமுகவில் இணைந்தார்


    👉அக்னிபத் திட்டத்திற்கு எதிரான நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


    👉பணவீக்கம், விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராட்டம்


    👉அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக 80 ரூபாயை தொட்டது


    👉ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பான வழக்கு:

நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது;

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு

- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


செய்தியாளர் பானு