இரு வரி செய்திகள்

 


    👉தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டில் 109 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன


* இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 501 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளன - மத்திய உள்துறை அமைச்சகம்

 🍁🍁🍁🍁🍁

    👉நாடு முழுவதும் உள்ள பல்வேறு குடும்ப நல நீதிமன்றங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன


குடும்ப நல வழக்குகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்ய வேண்டும் - மக்களவையில் அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் பேச்சு

🍁🍁🍁🍁🍁

     👉ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி, பணியிடை நீக்கம்

🍁🍁🍁🍁🍁

    👉கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த நிதீஷ் வசந்த் (19) என்பவர் கைது

🍁🍁🍁🍁🍁

    👉தமிழகத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை சமர்பிக்க உத்தரவு 

மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    👉நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு

🍁🍁🍁🍁🍁

    👉திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் சாப்பிட வந்த பார்வையற்ற பெண் மற்றும் அவரது தாயை தாக்கிய கோயில் ஊழியர் கலாமணியை சஸ்பெண்ட் செய்து இணை ஆணையர் உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    👉பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை

 பட்டப்பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல்

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை

🍁🍁🍁🍁🍁

    👉அதிமுக தொண்டர்களின் உழைப்பால் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி ஆனார்; 

தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், என் அரசியல் வாழ்க்கை விட்டு விலக தயார்

-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

🍁🍁🍁🍁🍁

        🙏செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு


 சென்னையில் நடைபெறவுள்ள துவக்க விழாவுக்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

🍁🍁🍁🍁🍁

        👉கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளியில் கோல்போஸ்ட் சரிந்து விழுந்த விபத்தில் 7 வயது சிறுமி படுகாயம்


 கடந்த 22ஆம் தேதி விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாக இயக்குனர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

🍁🍁🍁🍁🍁

    👉அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள், பரிசுப்பொருட்கள் கொள்ளை போனதாக கொடுக்கப்பட்ட புகார்

 வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் சி.வி.சண்முகம் சார்பில் மனு

🍁🍁🍁🍁🍁

    👉கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலெட்சுமி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு

அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசனை கள்ளக்குறிச்சிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

🍁🍁🍁🍁🍁

    💐குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சியை நிறைவு செய்த 41 பேரை டிஎஸ்பி-க்களாக நியமித்து டிஜிபி ஆணை


நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 41 டிஎஸ்பி-க்கள் நியமனம்

🍁🍁🍁🍁🍁

    🌷🌹சென்னை போர் நினைவு சின்னத்தில் கார்கில் போரில் உயிரிழந்தோர் நினைவாக மலர்  வளையம் வைத்து அஞ்சலி


கார்கில் வெற்றி தினமான இன்று தெற்கு மண்டல லெப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமையில் நினைவு அஞ்சலி

🍁🍁🍁🍁🍁

    👉ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட்  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

சமீபத்தில் சென்னையில் உள்ள எழிலகம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ₨35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லைக்கு மாற்றப்பட்ட நடராஜன் சஸ்பெண்ட்

🍁🍁🍁🍁🍁
    👉ஆவினில் "தம்பி"


ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னம்


செய்தியாளர் பாஸ்கர்