💐ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது💐

 


    ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது.


- கரூர் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் பேச்சு.    80,750 பேருக்கு ஒரே நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


ஒவ்வொருவருக்கும் தமது மனசாட்சியே நீதிபதி என்பார்கள். அதன்படி எனது மனசாட்சிக்கு உண்மையாக ஆட்சி நடத்துகிறேன். ஓராண்டு கால ஆட்சி மனநிறைவைத் தருகிறது. - முதல்வர் 


மக்களிடம் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எப்போதும் தயார்.    என்னை விமர்சிப்பதன் மூலம் பிரபலமடையலாம் என்று தினந்தோறும் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை, நேரமுமில்லை.


மக்களுக்கான திட்டங்கள் பற்றி சிந்திக்கவே, செயலாற்றவே நேரம் போதவில்லை. - முதல்வர் மு. க. ஸ்டாலின்.


மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். ஆனால், மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவருடன் போராடுவது சிரமமான காரியம் என்று பெரியார் சொல்வார். எனவே, வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. - முதல்வர் மு. க. ஸ்டாலின்


மக்களுடைய முகத்தில் தென்படும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கான சாட்சி. - முதல்வர் .    ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சியில் போட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும். கரூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டத்தை விட தொழில் வளர்ச்சியில் வளர வேண்டும். - முதல்வர் மு. க. ஸ்டாலின்.    கடல் இல்லாத கரூர்-க்கு கடல் போல் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். பேசாமல் உங்களை பார்த்து கொண்டு இருக்கலாம் போல் இருக்கிறது;

எப்போதும் எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி

-கரூரில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


செய்தியாளர் பானு