🙏குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி என அறிவிப்பு
🌴🌴🌴🌴🌴🌴
💢இளநிலை மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு
தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நடைபெற்ற நீட்தேர்வு
80 சதவீத மாணவர்கள் நீட்தேர்வை எழுதியதாக தகவல்
🌴🌴🌴🌴🌴🌴
👉சின்னசேலம் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகிய 3 பேரும் கைது: டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி
சின்னசேலம் கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
🌴🌴🌴🌴🌴🌴
👉கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் ஆறுதல்
🌴🌴🌴🌴🌴🌴
👉நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு
🌴🌴🌴🌴🌴🌴
👉கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் ஆறுதல்
சென்னை: வார விடுப்பு வழங்காமல் அலைக் கழித்ததாக தலைமை காவலர் தற்கொலை முயற்சி
🌴🌴🌴🌴🌴🌴
👉கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு
மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
🌴🌴🌴🌴🌴🌴
👉மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்பு
🌴🌴🌴🌴🌴🌴
🌵வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏனாமில் நடைபெற்று வரும் நிவாரணப்பணிகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு.
செய்தியாளர் பாஸ்கர்