🙏44 செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா💐

 


        🙏செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - பிரதமர் மோடி பேச்சு.


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் 'வணக்கம்' என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

குறைவான காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம் - பிரதமர் மோடி

தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது    தமிழகத்தில் பல கோவில்கள் பல விளையாட்டுப்போட்டிகளை குறிப்பதாக உள்ளன - பிரதமர் மோடி

தமிழகம் வலிமையான கலாச்சார பெருமைகளைக் கொண்டது 

பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ளது தமிழகம் 

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும்.


75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமை    அதிதி தேவோ பவ என்று பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பெருமையுடன் சொல்லப்பட்டுள்ளது  


விருந்தோம்பல் பற்றி திருக்குறளில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது


நாம் அனைவருமே வெற்றி பெறுபவர்கள்.. எதிர்கால வெற்றியாளர்கள்     அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் - பிரதமர் மோடி


பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும்.


இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றிருக்கிறது- செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

சர்வதேச போட்டி ஏற்பாடுகளைச் செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும் நிலையில், 4 மாதங்களில் தமிழ்நாடு ஏற்பாடு செய்தது.

கீழடியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை, அங்கு நடந்த அகழாய்வில் 2 வகையான சுடு மண்ணாலான  ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளது; 

இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும்.    வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா;

இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்-முதலமைச்சர் ஸ்டாலின்.


    💐இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி! 

இதன்மூலம் இந்திய அணி கருப்பு நிற காயை இந்த ஒலிம்பியாட்டில் பயன்படுத்தும்


    🙏தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்து சென்ற பெருமை பிரதமரையே சேரும்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு


    🌷🌷செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்பு


செய்தியாளர் பாலாஜி