👉மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு - கண்காணிக்க
அத்துறை செயலாளர் தலைமையில்
உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை
🌴🌴🌴🌴🌴🌴
👉திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு.
🌴🌴🌴🌴🌴🌴
👉தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
🌴🌴🌴🌴🌴🌴
👉நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
🌴🌴🌴🌴🌴🌴
👉பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது; பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது; மாணவர்கள் ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
🌴🌴🌴🌴🌴🌴
👉பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28 முதல் தொடக்கம்.: அண்ணா பல்கலை. அறிவிப்பு
🌴🌴🌴🌴🌴🌴
👉கலைஞரை போல் ஆட்சி நடத்தி வருவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு என்னை பாராட்டினார்;
கலைஞர் போல் எந்த கொம்பனாலும் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் அவரை ஒப்பிட்டு கூறியது எனக்கு மிகுந்த பெருமை"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🌴🌴🌴🌴🌴🌴
👉சிவகங்கை: ரூ.119.68 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
🌴🌴🌴🌴🌴🌴
👉நிர்வாண புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பெண்களை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டும் செய்யலை, சமூகம் பொறுத்துக் கொள்வதில்லை - உச்ச நீதிமன்றம்
🌴🌴🌴🌴🌴🌴
செய்தியாளர் கார்த்திக்