ஒரு வரிச் செய்திகள்

 


    🌷அவ்வையாருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம்

                🌸🌸🌸🌸🌸🌸

    👉விருதுநகர் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் 3 லட்சம் நிதி உதவி

                 🌸🌸🌸🌸🌸🌸

    ❤ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பு

                 🌸🌸🌸🌸🌸🌸

    👉தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு 


மே 22ஆம் தான் பல்லக்கு தூக்கு நிகழ்வு நடக்கிறது; அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்


- அமைச்சர் சேகர் பாபு

                 🌸🌸🌸🌸🌸🌸

    👮நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை.  இயற்கையாக மரணிக்கும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்


நெல்லை போக்சோ நீதிமன்றம்

                   🌸🌸🌸🌸🌸🌸

    👉உடலில் மிகவும் வலுவான எலும்பு உடைக்கப்பட்டுள்ளது. மண்டையில் 1 செ.மீ ஆழத்திற்கு காயம். 13 இடங்களில் காயம் : லாக்கப் மரணத்தை சந்தித்த விக்னேஷ்-ன் பிரேத பரிசோதனை அறிக்கை.

     🌸🌸🌸🌸🌸🌸

    👉மதத்திற்கு கட்டுப்பாடு விதிப்பது நல்லதல்ல. ஒரு சமயத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெள்ளைகாரனால் கூட அது முடியவில்லை

- மதுரை ஆதினம் பேட்டி

    👉பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது;


இதுபோல் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது 

- மன்னார்குடி ஜீயர்

     🌸🌸🌸🌸🌸🌸

    👉மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பாக்கப்படுவார்

     🌸🌸🌸🌸🌸🌸

    👧சேலம்:  வீராணம் அருகே 12ம் வகுப்பு மாணவி பிரகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை


*நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவி தற்கொலை

     🌸🌸🌸🌸🌸🌸

    👉கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம்


"அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60% பங்கு தொகையாக வழங்கப்படும்"

     🌸🌸🌸🌸🌸🌸

    👉மருத்துவ மாணவர்கள் வரவேற்பில் சமஸ்கிரத உறுதிமொழி ஒரு திட்டமிட்ட அரசியல் சதி


- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.

     🌸🌸🌸🌸🌸🌸

    😪சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                     🌸🌸🌸🌸🌸🌸

    🌺தகவல் தொழில்நுட்பவியல் துறை இனி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு.


செய்தியாளர் ராகவன்.