இரு வரிச் செய்திகள்

 


    🙏மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🐵🐵🐵🐵🐵

    🌺சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், இயக்குநர் டி.ராஜேந்தரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

🐵🐵🐵🐵🐵

    12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! 


💐சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான் நியமனம்


💐திருச்சி மாநகராட்சி ஆணையராக வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளத


💐மதுரை மாநகராட்சி ஆணையராக சிம்ரன் சித் நியமனம்

🐵🐵🐵🐵🐵

    👉சென்னை, தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் hdfc  100 வாடிக்கையாளர்களுக்கு தலா ₨13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக தகவல்


பணப்பரிமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கம்

🐵🐵🐵🐵🐵

    👉கொடைக்கானலில் 59 ஆவது மலர்க்கண்காட்சி  நிறைவு பெற்றது.


 மொத்தம் ஆறு நாட்கள் நடந்த கண்காட்சியை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததாக பூங்கா நிர்வாகம் தகவல்.

🐵🐵🐵🐵🐵

    👉22 பேருடன் மாயமான நேபாளம் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு


மஸ்டாங் பகுதியில் உள்ள கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்தது தெரிய வந்துள்ளது

🐵🐵🐵🐵🐵


    🌹நடிகர் விஜய் கால்ஷீட் கொடுத்தால் இணைந்து நடிக்கத் தயார் 


மலேசியாவில் செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில்

🐵🐵🐵🐵🐵

    👉தருமபுரி: தினமும் 5 பேர் என்ற கணக்கில், இதுவரை ஆயிரக்கானோருக்கு கருக்கலைப்பு;


செவிலியர் உட்பட 7 பேர் கைது

🐵🐵🐵🐵🐵

    👉புதுக்கோட்டையில் +2 பொதுத்தேர்வின் போது இரு மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கிய சம்பவம் தொடர்பாக பணியிலிருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

🐵🐵🐵🐵🐵

    


    👉ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது வீட்டிற்கு சென்று நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி

🐵🐵🐵🐵🐵

    👉பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

🐵🐵🐵🐵🐵

    👉அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

🐵🐵🐵🐵🐵

    👉என் தந்தையின் கேள்விக்கும், வாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் என்னை தாக்குகிறார்கள், அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்’ என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

🐵🐵🐵🐵🐵

        👉விநாயகர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட கற்சிலைகள் ₨70 லட்சத்திற்கு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார்


முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பரபரப்பு புகார்

🐵🐵🐵🐵🐵

    👉செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே உள்ள ஓலக்கூர் கிராமத்தில் 960 வருட தொன்மையான சிவன் கோவிலில் கடத்தல் என புகார் 


50 வருடங்களுக்கு முன் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்ட சிலைகள் திருடப்பட்டதாக புகார்

🐵🐵🐵🐵🐵

   


 🙏திரைப்படம் வெளியாவதை ஒட்டி கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர்

🐵🐵🐵🐵🐵


செய்தியாளர் கார்த்திக்