இருவரி செய்திகள்

 


        🌹🌹பேரறிவாளன் விடுதலை குறித்த நீதிமன்ற உத்தரவை முழுவதுமாக படிக்கவில்லை; ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கும் எதிராக நீதிமன்றம் கருத்து சொன்னதா? அல்லது பிரச்சினைக்குரிய மாநில ஆளுநர்களுக்கு மட்டுமா என்று தெரியவில்லை

- காரைக்காலில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

💐💐💐💐💐💐💐💐

     👮சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

💐💐💐💐💐💐💐💐

    👉பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை அடுத்த வாரம் நீக்க உள்ளதாக இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு

உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் பாமாயிலுக்கான தேவை கடுமையாக அதிகரித்த நிலையில், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மலேசியா, இந்தோனேசியா நாடுகள் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தன.

💐💐💐💐💐💐💐💐

    👉நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


நாளை இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம்

💐💐💐💐💐💐💐💐

    👮கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு, டெல்லி கொண்டு செல்லப்பட்டார்

விசா மோசடி வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்

💐💐💐💐💐💐💐💐

    👉கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. திருமண நிகழ்வுகளில் போட்டோஷூட்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

💐💐💐💐💐💐💐💐

    👉திருவாரூர்: ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டிய போதுசாமி சிலைகள் கண்டெடுப்பு


3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, ஒரு அடி உயரமுள்ள அப்பர் சிலை கண்டெடுப்பு


சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலையமும் கிடைத்துள்ளது

💐💐💐💐💐💐💐💐

     👉இந்தியாவின் நிலைமையும், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமையும் பார்ப்பதற்கு ஒன்றாகவே இருக்கிறது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

💐💐💐💐💐💐💐💐

    👉7 பேரும் நிரபராதிகள் அல்ல - அண்ணாமலை


உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல - அண்ணாமலை


காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும்

💐💐💐💐💐💐💐💐

    👉அதிக அளவில் செக் மோசடி நடைபெறும் மாநிலங்களில் இது தொடர்பான வழக்கு விசாரணையை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

💐💐💐💐💐💐💐💐

    👉பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா?


முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரஸின் நடவடிக்கை இருக்கிறது

- காங்கிரசுக்கு குஷ்பு சவால்

💐💐💐💐💐💐💐💐

    👉மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை சேர நடத்தப்படும் CUET - PG தேர்வுக்கு இன்று முதல் வரும் ஜூன் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

- தேர்வு முகமை அறிவிப்பு

💐💐💐💐💐💐💐💐

    👈👉திருவண்ணாமலையில் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் பட்டா நிலத்துடன், பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

💐💐💐💐💐💐💐💐

    👉👈பேரறிவாளன் விடுதலை சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றோம்; 


இதன் விளைவு கட்டுப்பாடற்ற சட்டம் ஒழுங்கு தூக்கி எறியப்படும் சூழல் உருவாகும்- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

💐💐💐💐💐💐💐💐

    👈👉மதுரையில் ரூ.900 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில், முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு

கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100%  நிறைவு பெறும்

- அமைச்சர் எ.வ.வேலு

💐💐💐💐💐💐💐💐

    👉👈சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரும் 30ம்தேதி நடைபெறும் - மேயர் பிரியா ராஜன் 


அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள மேயர் அறிவுறுத்தல்

💐💐💐💐💐💐💐💐

'    🌺வென்றது நீதி, அற்புதம் அன்னையின் போர்க்குணம்' - கமல்ஹாசன்

💐💐💐💐💐💐💐💐

    🌷🌷தம்பி பேரறிவாளன் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அற்புதம்மாள், அவரது குடும்பத்திற்கு வாழ்த்துகள்;


பேரறிவாளன் விடுதலைக்கு துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி 

- நடிகர் சத்யராஜ்    👉முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் திரு. பேரறிவாளன் அவர்களின் விடுதலை குறித்து தாயார்  அற்புதம் அம்மாள் அவர்களிடம் தொலைபேசி மூலம் தனது மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்.


செய்தியாளர் மணிவண்ணன்