சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது

 


    கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ₹8.22 குறைந்து ₹102.63-க்கு விற்பனை; ஒரு லிட்டர் டீசல், ₹6.70 குறைந்து ₹94.24-க்கு விற்பனை.


பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.     பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹200 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு!


பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்