இருவரி செய்தித்துளிகள்

 


     🌷 நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடல் வெளியானது

🌴🌴🌴🌴🌴

  🌺முதலமைச்சர் ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தவருக்கு முன் ஜாமீன் வழங்க ஆரணி தாலுகா காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

🌴🌴🌴🌴🌴

    🌺படுத்த படுக்கையாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி சிந்துவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரிப்பு

🌴🌴🌴🌴🌴

    👉ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன


* திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் உள்ளனர்

🌴🌴🌴🌴🌴

    👉மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் அது பாலியல் குற்றமா இல்லையா என்பது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள்  வெவ்வேறு தீர்ப்பு.

 இதனையடுத்து வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது

🌴🌴🌴🌴🌴

    👉எப்போது சென்றாலும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்துதான்  முதலமைச்சர்  கேட்பார்;


இந்த மாவட்டத்திற்காக ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை அவர் கொடுத்துள்ளார்.


- கோவை பொது கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி

🌴🌴🌴🌴🌴

    👉தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது என்று பாஜக எம்பி தியா குமாரி தெரிவித்துள்ளார்.

🌴🌴🌴🌴🌴

    👉மத்திய அரசு பணியில் 90 சதவீதம் பேர் பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சேர்ந்தவர்கள் தான் என்றும், ஒரு சதவிகிதம் கூட தமிழகத்தை சார்ந்தவர் இல்லை என்றும், இது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.

🌴🌴🌴🌴🌴

    👉டான்ஜெட்கோ நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அலுவலகம் விமர்சித்துள்ளது.

2017 - 2020 ஆண்டுகளில் ரூ.3.50க்கு வாங்க வாய்ப்பிருந்தும் ரூ.5க்கு மின்சாரம் வாங்கியது டான்ஜெட்கோ! - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

🌴🌴🌴🌴🌴

    👮ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுக நிர்வாகி மீது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🌴🌴🌴🌴🌴

    👉துபாயில் இருந்து மதுரை வந்த பெண் பயணியிடம் களிமண்ணிற்குள் இருந்து கடத்தி வரப்பட்ட 43 லட்சத்து 24 ஆயிரத்து மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

🌴🌴🌴🌴🌴

     👮தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் பேட்டி*


பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுத்துள்ள விவகாரம் குறித்து தனது கவனத்திற்கு வந்துள்ளது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

🌴🌴🌴🌴🌴

    👉தேனி வீரபாண்டி  கோவில் திருவிழாவை முன்னிட்டு பொழுதுபோக்கு அம்சமாக நிறுவப்பட்டுள்ள ராட்டினத்தை இயக்கும் தொழிலாளியான  முத்துக்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

🌴🌴🌴🌴🌴

    👉இணையதளங்களுக்கு சிறார் அடிமையாவது அதிகரித்துள்ளதாகவும் மனநல சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இந்த இணைய அடிமைத்தனம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

🌴🌴🌴🌴🌴

    👊கள்ளக்குறிச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 9 கிலோ உண்ணத்தகாத நிலையில் உள்ள பிரியாணி மற்றும் அதிக செயற்கை நிறமூட்டி, 3 கிலோ ஷவர்மா பறிமுதல்


விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 5 கடைகளுக்கு நோட்டீஸ்

🌴🌴🌴🌴🌴

    👉இலங்கை: தங்காலை மெடில்லா பிரதேசத்தில் உள்ள ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

🌴🌴🌴🌴🌴

    👉திருவாரூர் : நன்னிலம் அருகே அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் கூறி மணிகண்டன் என்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

🌴🌴🌴🌴🌴

    👮பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பணி பார்வையாளர் ₨18 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார்

🌴🌴🌴🌴🌴

      👉சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் மனஅழுத்தத்தால் தற்கொலைதான் செய்தார்

அவர் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை

- உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப்பத்திரம் தாக்கல்

🌴🌴🌴🌴🌴

    👉இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு

பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் - இலங்கை அரசு

🌴🌴🌴🌴🌴

    👉கூட்டுறவுக் கடன் சங்க தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை 


சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு

🌴🌴🌴🌴🌴

 


   👉மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு குறைவாக உள்ளது டாக்டர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக  பில்கேட்ஸ் பதிவு

🌴🌴🌴🌴🌴

    👉விசிக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தை முதலமைச்சர் நிதிக்கு வழங்கி உள்ளோம்

- விசிக தலைவர் தொல். திருமாவளவன்

🌴🌴🌴🌴🌴

    👉மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

🌴🌴🌴🌴🌴

    👉உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்


உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாடு காணொலிக்காட்சி வழியாக நடைபெறுகிறது

🌴🌴🌴🌴🌴

    👉சமஸ்கிருதம், போஜ்புரி,அசாமிய உள்ளிட்ட மேலும் 24 மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மற்றும் கூகுள் தேடல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. - சுந்தர் பிச்சை அறிவிப்பு.

🌴🌴🌴🌴🌴

    👉சிதம்பரம் கோயிலில் விசாரணை நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு- சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு

🌴🌴🌴🌴🌴

நிருபர் பாஸ்கர்