பார் கவுன்சில் அதிரடி குற்றச்சாட்டுக்கு ஆளான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக தடை

 


    3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை


கொலை மற்றும் போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற தடை.  தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உத்தரவு.


'போலியான மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளை தயாரித்தது தொடர்பான புகார் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு ஆளான ஆதிகேசவன், சதிஷ்குமார் ஆகியோர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது.


மேலும் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட எழிலரசன் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நதியா, தினேஷ் பாபு ஆகியோரும் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது.என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


செய்தியாளர் பாலாஜி