இரண்டு வைரக்கற்கள் திண்டுக்கல்லில் முதல்வர் பேச்சு.

 


        திண்டுக்கல் மாவட்டத்தில்  206 கோடி மதிப்பீட்டில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


தமிழக முதல்வர் பேச்சு.


விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்பு பெற்றது இந்த திண்டுக்கல் மண். திண்டுக்கல்லில் திமுகவிற்க்கு ஒராயிரம் வைரக்கற்கள் உள்ளது.எந்த தேர்தல் இருந்தாலும் இந்த மாவட்டம் வெற்றி பெறும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது அதற்க்கு காரணம் இரண்டு வைர கற்கள். அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகும்,


ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், தொப்பம்பட்டி, 930 கோடி செலவில் புதிதாக குடிநீர் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தமிழகம் முழுவதும் திட்டங்கள் அறிவித்துவிட்டு திட்டங்கள் எப்படி செயல்படுத்தபட்டு வருகிறது. திட்டத்தின் தற்போதைய நிலமை என்ன என்பதை தலைமை செயலகத்தில் இருந்து எனது அறையில் இருந்து நாள்தோறும் கண்காணித்து வருகிறேன், இந்த ஆட்சி திராவிட மாடல்


மாநிலங்களை முடக்குவதா நினைத்து மக்களை முடக்கி வருகின்றனர் ஒரு சிலர். தமிழகம் கடுமையான நிதி நெருக்கடி உள்ளது ஆனாலும் மக்களுக்கான திட்டங்கள் செய்து வருகிறோம். தலைமை தொண்டனாக இருந்து மக்களுக்கு தேவையான தேவைகளை செய்து கொடுப்பேன். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 60 சதவிகிதம் நிறைவேற்றி உள்ளோம். மீதி உள்ள வாக்குறுதிகளை பாராளுமன்ற தேர்தலுக்குள் நிறைவேற்றபடும்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு: 


10 மாத கால ஆட்சியில் தளபதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 கல்லூரிகள் அறிவித்துள்ளார் அவருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திண்டுக்கல் நகர் குடிநீருக்காக வைகையில் இருந்து குடிநீர் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கொடுத்த வாக்குறுதி 70சதவிகிதம் முடித்துவிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவார் தமிழக முதல்வர்.செய்தியாளர் ராகவன்