இரு வரி செய்திகள்

 


    👉தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்ட Hong Fu  நிறுவனம் தமிழகத்தில் ₨1000 கோடி முதலீடு


சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது - அமைச்சர் தங்கம் தென்னரசு

👀👀❤👀❤👀👀

    👉ரூ.310.92 கோடி மதிப்பிலான 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

👀👀❤👀❤👀👀

    👉நீட் தேர்வு கட்டணம் உயர்வு : கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு


➤ பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்வு


➤  EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு


➤பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800-லிருந்து ரூ.900 ஆக உயர்வு

👀👀❤👀❤👀👀

    👉பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்

👀👀❤👀❤👀👀

    👉நிலக்கரி பிரச்சினையில் மத்திய அரசு மீது பழி போடுவதா?

மின் தடை ஏற்பட்டால் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்

 தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை தேவை - ஓபிஎஸ்

👀👀❤👀❤👀👀

    👉ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

👀👀❤👀❤👀👀

    👉சென்னை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம்


வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம்

👀👀❤👀❤👀👀

    👉வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது

தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன

 தமிழக அரசு தரவுகளை கொண்டு வாதாடியதை உச்சநீதிமன்றமே பாராட்டியது -  - முதல்வர் மு.க.ஸ்டாலின்

👀👀❤👀❤👀👀

    👉சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்திப்பு


சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதி

👀👀❤👀❤👀👀

    👉கன்னியாகுமரி மாவட்டம் காதலனுடன் திருமணம் செய்து கொள்ள விஷம் கொடுத்து குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.

👀👀❤👀❤👀👀

    👉கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளுக்கு மட்டுமின்றி ஓட்டு வீடுகளும் ஆஸ்பெட்டாஸ் சீட் வேயப்படும் வீடுகளுக்கும் மாற்றும் வீடு வழங்கவேண்டும் - பிச்சாண்டி

👀👀❤👀❤👀👀

    🙏7.5% இடஒதுக்கீடு தீர்ப்பு - அண்ணாமலை வரவேற்பு

👀👀❤👀❤👀👀

    🙏தமிழகத்தின் பனை மரத்தின் பரப்பை அதிகரிக்க 293 கோடி ரூபாய் ஒதுக்கீடு

👀👀❤👀❤👀👀

    👊👉காஞ்சிபுரம் : வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்திய கல்லூரி மாணவிகள்

சமூக வலைதளத்தில் வீடியோ பரவிய நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிக இடைநீக்கம்

👀👀❤👀❤👀👀

    👉கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை இணையவழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் 

நீர் மற்றும் நிலவள மேலாண்மை பணிகள் ₨683.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் - ஊரக வளர்ச்சித்துறை

👀👀❤👀❤👀👀

    👉மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

👀👀❤👀❤👀👀

👉பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் உத்தரவு சட்ட விரோதமானது - பாக். நீதிமன்றம்

👀👀❤👀❤👀👀

    👉மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானம் வெற்றி


ஐநா பொது சபை ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கியது

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

👀👀❤👀❤👀👀

    😢சென்னை வளசரவாக்கம் குடும்ப தகராறு காரணமாக தனியார் தொலைக்காட்சியில்பணிபுரியும்  நபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

👀👀❤👀❤👀👀

    👉கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

👀👀❤👀❤👀👀

செய்தியாளர் பாஸ்கர்