❤தமிழ்நாடு முதலமைச்சர் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சமத்துவபுரத்தை திருமதி கம்சலா என்ற பட்டியல் இன பெண்ணை ரிப்பன் வெட்டி திறக்கச் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
👉💢கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகான முதல் கூட்டம்.
சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம் சமர்பிப்பதற்கான மாமன்ற கூட்டம் வரும் 9ம் தேதி காலை 10மணிக்கு கூடுகிறது - சென்னை மாநகராட்சி மேயர் அறிவிப்பு..
👉பெரியகுளம் அருகே இயங்கிவரும் குரோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து.
👉வாக்களித்த மக்களுக்கு சொத்து வரி உயர்வுதான் பரிசு; அடுத்தாக மின்சார கட்டணம் உயர்த்தப்படும்; தொடர்ந்து பஸ் கட்டணமும் நிச்சயம் அதிகரிக்கும்
- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
👉💥லூலு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பது இங்கு உள்ள அனைத்து வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம் : வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா பேட்டி.
👉மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
👋👉ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை குழு அமைப்பு
12 பேர் கொண்ட மாநில கல்விக் கொள்கை குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும்
👉💢ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும்
ரஷ்ய மருத்துவ கல்லூரிகளில், இந்திய மாணவர்கள் படிப்பை தொடர ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., திருமாவளவன் பேச்சு
👊👉விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை
வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்தை வெளியிட தடை
👉💥ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதமர் கூறியுள்ளார்;
எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள் - எடப்பாடி பழனிசாமி
வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் வரலாம் - எடப்பாடி பழனிசாமி
நிருபர் கார்த்திக்