சென்னை: ராயபுரம் ரவுண்டப் நடத்தும் குறை தீர்ப்போம் நிகழ்ச்சி ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரீம் மூர்த்தி கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
இதில் சமூக ஆர்வலர்கள் ராயபுரம் பகுதி பல அமைப்பை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை பதிவு செய்தனர்.
ராயபுரம் பகுதியில் மாநகராட்சி கழிப்பிடங்கள் பல இடங்களில் சரியாக இல்லாத காரணத்தால் பொது நடைபாதையில் சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர் அதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
தெருக்களில் தார் சாலைகள் சரியாக போடாததால் பல இடங்களில் மேடு பள்ளமாக உள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் புகார் கூறினர் மின்விளக்குகள் சில இடங்களில் சரியாக தெரியாததால் அதையும் சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.
ராயபுரம் பகுதியில் உள்ள ஆர் எஸ் ஆர் எம் அரசு மருத்துவமனையில் ஆண் பிள்ளைக்கு ஆயிரம் பெண் பிள்ளைக்கு 500 என்று வாங்க படுவதாகவும் சமூக ஆர்வலர் புகார் கூறினார்.
கொரோனா தொற்று குறைந்த நிலையில் மாநகராட்சி விளையாட்டுத்துறை உள்ள உடற்பயிற்சி கூடம் திறக்க வேண்டும் என்று கூறினர்
மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் கேமராக்களை தெருக்களில் இல்லாத இடங்களில் பொருத்த வேண்டும் என்றும் தங்கள் பதிவுகளை பதிவு செய்தனர் மேலும் செயல்படாத கேமராக்களை செயல்படுத்தவும் அதை சரி செய்யவும் வேண்டுமென்றும் கூறினர்.
ராயபுரம் பகுதியிலுளள குறுகிய தெருக்களில் மினி பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தண்ணீர் லாரிகள் மிக விரைவாகச் சென்று பல விபத்துகளை உருவாக்குவதால் பெரிய அளவிலான தண்ணீர் லாரிகளை நிறுத்தி மினி லாரியில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
திமுக கழக உறுப்பினர் ந.மனோகரன் உரையில சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறிய குறைகளை விரைவில் சட்டமன்ற உறுப்பினரிடம் கூறி அழுத்தம் தந்து சரி செய்யப்படும் என்று கூறினார்.
இப்பகுதியின் குறைகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ஐடீரீம் மூர்த்தி ராயபுரம் பகுதியில் உள்ள குறைகளை விரைவில் சரி செய்து தர படும் என்று தனது உரையில் கூறினார்
இந்த நிகழ்ச்சியை ராயபுரம் ரவுண்டானா சார்பில் ரமேஷ் மற்றும் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
நிருபர் தங்கதுரை