நெல்லையில் நகை கடையில் கொள்ளை அடித்தவர்கள் கைது ...மேலும் சில செய்திகள்

 


        நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நகைக்கடை வியாபாரியை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது. 3 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல்  - SP சரவணன்  செய்தியாளர்களுக்கு பேட்டி.


    👉திண்டுக்கல் எரியோடு அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ 8இலட்சம் மோசடி செய்த விஜயகுமார் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு  போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    👉திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன 235 அலைபேசிகள் மீட்கபட்டு அவற்றை  உரியவர்களிடம் திண்டுக்கல் எஸ்.பி ஸ்ரீனிவாசன் ஒப்படைத்தார்.


    👉தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!


ஆளுநரின் தேநீர் விருந்தில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வது என்பது வழக்கம், இதில் அரசியலை தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து;


தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழம்பியுள்ளனர், அரசியல் செய்து மேலும் குழப்ப கூடாது”- ஜி.கே.வாசன், எம்.பி


ஆளுநர் தேநீர் விருந்து - அதிமுக, பாஜக, பாமக பங்கேற்பு


    👉சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவுக்கு, அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை;


இந்த நாடக அரசியலை மக்களிடம்  அம்பலப்படுத்துவோம்- திருமாவளவன், எம்.பி


    👉எனக்கு தெரிந்து ஆளுநர் அளித்திருக்கக் கூடிய ஒரு தேநீர் விருந்தை மாநில அரசே புறக்கணித்திருப்பது என்பது இதுவே முதல் முறை; இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மேலும் மதிப்பு கொடுக்கக்கூடிய செயலாக பார்க்கிறேன்" - சி.பி.எம். பாலகிருஷ்ணன்


    👉இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அமைச்சர் கருத்து தெரிவித்த நிலையில் அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியாவுக்கும் சில கருத்துகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


    👉அரசு ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் உணவு இடைவெளி எடுக்கக் கூடாது என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


    👉சென்னை, கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்

கட்டண வசூல் புகார் குறித்து போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் ஆய்வு

வீடியோ


கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகை பயணிகளிடம் மீண்டும் ஒப்படைப்பு.


    👉அம்பேத்கரின் பெயரை வைத்து தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. ஆனால், அவரது தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டுகின்றன.

பாஜகவின் நோக்கம் அம்பேத்கரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான்;

 அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக உள்ளது

 - அண்ணாமலை


செய்தியாளர் கார்த்திக்