இரு வரி செய்தி துளிகள்

 


    👉பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுச்சேரி, காரைக்கால், சென்னை உட்பட 6 இடங்களில் வாக்குப்பதிவு  தொடங்கியது


தமிழகம், கேரளா, புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு குடிமக்கள் 4,564 பேர் வாக்களிக்க உள்ளனர்


தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்       🙏 தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் திரைப்பிரபலங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை, நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 


 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.    👉இந்தியாவை காக்க முதலில் மாநிலங்களை காக்க வேண்டும்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    👉மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ்நாடு மாடலை, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பின்பற்றும்” - சீதாராம் யெச்சூரி


    👉மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன் 


எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார் 


வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது - முதல்வர் ஸ்டாலின்


    👉திருநீறு, குங்குமம் தயாரிப்பு பணியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்


    👉நடிகை பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு: ஆடியோ வெளியானதால் பரபரப்பு    👉திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


    👉பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில்! நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்


       🙏கர்நாடகாவின் துமகூரு அருகே அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று காணொலியில் திறக்கிறார்    👉இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை


    👉சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம்- தமிழ்நாடு அரசு


    👉சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு


சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு


     👉இனி சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது - தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும்.

தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி முகாமை நடத்த உத்தரவு


    👉கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.


செய்தியாளர் பாலாஜி