டெல்லியில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 


        🙏டெல்லியில்  நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவைத் தொகை ₨13,504.74 கோடி உட்பட ₨20,860.4 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்


2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ ₨20,000 கோடி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

    👉தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்!

மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு.


    👉பாடத்தின் மீது முழு கவனம் இருந்தால் ஆன்லைனிலும் சிறப்பாக படிக்கலாம் - பிரதமர் மோடி


    👮கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45 வயதான நபரை காவல்துறையினர் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.


    👉டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் இன்று முதல் ரத்து


    👉அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி.

பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத் துறை உத்தரவு.


    👉விமானங்களுக்கான எரிபொருள் விலை 2% அதிகரித்து ஒரு கிலோ லிட்டர் ₨1,12,924.83க்கு விற்பனை


    👉100 யூனிட்டுக்குள் ₨1.55 ஆக இருந்த கட்டணம் ₨1.90 ஆக உயர்வு 

101 முதல் 200 யூனிட் வரை ₨2.60 ஆக இருந்த கட்டணம் ₨2.75 ஆக உயர்வு 

கடந்த மாதம் கட்டண உயர்வை புதுச்சேரி அரசு மின்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்


    👉இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி இங்கிலாந்து நாட்டில் இருந்து பரிசு அனுப்புவதாக கூறி மூதாட்டியிடம் ரூ. 73 லட்சம் மோசடி செய்த மும்பை இளைஞரை நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.


    👉அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்:- 

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


    👉நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் சீலை அகற்ற உத்தரவு


    👉சென்னை அண்ணாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தங்க சங்கிலி பறிப்பு

அடுத்தடுத்து 2 மூதாட்டிகளிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வலம் வந்து 2 பேர் கைவரிசை


    👉சாலை விபத்துக்களை எவ்வாறு குறைக்கலாம்?


- இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பணிக்குழுவை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.


    👉கள்ளக்காதல் தொடர்பாக நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் இருவர் கைது*


திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குருக்கலையான்பட்டி என்ற கிராமத்தில் தாய்,  மகன் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோபி கிருஷ்ணன் மற்றும் இறந்த செல்வராஜ் மனைவி சுபஹாசினி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


நிருபர் பாஸ்கர்