முத்ரா திட்டத்தில் இதுவரை ரூ.18.60 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.

 


முத்ரா திட்டத்தில் இதுவரை ரூ.18.60 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுவிட்டதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.


இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களும்,     தொழில் முனைவோரும்     கடனுதவி பெறுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. 


இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.


வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் சார்பாக இந்த முத்ரா கடன்கள் வழங்கப்படுகின்றன. முத்ரா யோஜனா திட்டத்தின் மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.



ஷிஷு என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு இதுவரையில்34.42 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.18.60. லட்சம் கோடி கடன் (25-03-22)அன்று வரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 நிதியாண்டில் முத்ரா திட்டத்தில் இதுவரை ரூ.18.60 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு சிறு, குறு, நடுத்தர மக்களுக்கு கடன் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.



25-03-2022 வரை PMMY திட்டத்தின் கீழ் 4.86 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3.07 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது சுமார் 68 சதவீதம் கடன் பெண்களுக்கு சிறு தொழில் செய்வதற்காக வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.



 திருமதி மோகனா செல்வராஜ்