இரு வரி செய்திகள் சுருக்கம்

 


    😈திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில்சேவை தொடக்கம் என அறிவிப்பு

இன்று (மார்ச் 13) முதல் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு


    👮தென்காசி மாணவி தற்கொலை விவகாரம் - 2 பேராசிரியர்கள் கைது


    ✌வரும் காலங்களில் கோயில் தேர்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் சேகர் பாபு


    😢கொடைக்கானல் மேல்மலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.


👉சீனாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்!


2 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பாக சீனாவில் 3,393 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

பல நகரங்களில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு


    ✌நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் உள்ள தங்கள் தூதரகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு.!


    ✌யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி பயணம்


    👉ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை நோக்கி ஏவுகணை தாக்குதலால் பதற்றம்

ஈரானிலிருந்து தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் ஏவப்பட்டது - அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்


    ✋பாஜகவை வீழ்த்த காங்கிரசை மட்டும் நம்பக் கூடாது; அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

என கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு  

பைத்தியத்திற்கு பதிலளிப்பது சரியல்ல.

என காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பதில்


    👉சவுதி அரேபியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 81 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பயங்கரவாத சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்ட 81 கைதிகளுக்கு தூக்கு நிறைவேற்றம்


    ☝இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக ஒரு லிட்டர் 254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 45 சதவிகிதம் அதிகரித்து 176 ரூபாயாகியுள்ளது.


    👊சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது உக்ரைன்- பிரான்ஸ் அதிபரிடம் புடின் குற்றச்சாட்டு


    👮கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


     👏உக்ரைனிலிருந்து நேபாளத்தை சேர்ந்த 4 பேரை மீட்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி - நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா


    ✌பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் தடம் பதிக்க ஆம் ஆத்மி தீவிரம்

நவம்பர் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டம்
    👋உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் குழு சென்னை திரும்பினர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றார்


    🙏பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில்


மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தரப்பு விளக்கம்


    👉பி.எஃப் மீதான வட்டி 8.10%ஆக குறைப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF மீதான வட்டி 8.50% லிருந்து 8.10% ஆக குறைப்பு


    👉பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு

தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன்

ஹிட்லர், முசோலினியின் மறு உருவம் மு.க. ஸ்டாலின் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு    என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர் - ஆளுங்கட்சியினர் சமூக விரோதிகள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினர் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


ஜெயக்குமார் உடன் அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


நமது நிருபர்